விளக்கேற்றம் - வழக்கம் போல் விஜய், அஜித் ஆப்சென்ட் ?
06 Apr 2020
கொரானோ நோய் கொஞ்சம் கொஞ்சமாக வேகமாகவே பரவி வருகிறது. அந்த நோய் என்னும் இருட்டை ஒளி என்னும் வெளிச்சம் கொண்டு விரட்டும் விதமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மக்களை அவரவர் வீட்டில், விளக்கேற்றுதல், மெழுகுவர்த்தி ஏற்றுதல், டார்ச் லைட் அடித்தல் ஆகியவற்றை செய்ய வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று வழக்கம் போல ஹிந்தி, தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் பலரும் அதைச் செய்தனர்.
ஆனால், தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகளில் ஒரு சிலர் மட்டுமே அதைச் செய்தனர்.
ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சூரி, நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட சிலர் மட்டுமே அவரவர் வீட்டில் விளக்கேற்றினர்.
ஆனால், விஜய், அஜித் இருவரும் இதில் கலந்து கொள்ளவில்லை. கடந்த முறை நமக்காக சேவை செய்யும் டாக்டர்கள் உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைதட்ட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்ட போதும் அவர்கள் அதைச் செய்யவில்லை.
சினிமா ரசிகர்கள் பலருக்கும் விஜய், அஜித் ஆகிய இருவரும் கொரானோ வந்த பிறகு மிக மிக அமைதியாக இருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
Tags: cornona, tamilcinema, ajith, vijay