யுடியூப் சேனல் ஆரம்பிக்கும் ஹன்சிகா

06 Apr 2020

சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில்தான் செயல்படுவார்கள். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என அவற்றில் தங்களைப் பற்றிய சில விவரங்களை அடிக்கடி பதிவிட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஒரு சிலர் மட்டும்தான் யு டியூப் வீடியோ தளத்திலும் கணக்கு வைத்திருக்கிறார்கள். தனிப்பட்ட வீடியோ கணக்காக இல்லாமல் அவை வேறு வடிவிலான தளங்களாகத்தான் உள்ளன.

நடிகை ஹன்சிகா முதல் முறையாக தனிப்பட்ட வீடியோ தளத்தை ஆரம்பிக்கும் தமிழ் நடிகையாக இருக்கிறார். சற்று முன் அது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தளத்திற்கு ''IHansika'' எனப் பெயர் சூட்டியிருக்கிறார். விரைவில் இத்தளத்தில் வீடியோக்கள் வர ஆரம்பிக்கும்.

ஹன்சிகா பாணியில் இனி மேலும் பல நடிகைகள், நடிகர்கள் யு டியுப் கணக்கை ஆரம்பிக்கவும் வாய்ப்புள்ளது.

ஹன்சிகா யு டியூப் சேனல் முகவரி - https://www.youtube.com/watch?v=Ucz9A8YTa1w

Tags: tamilcinema, tamil cinema, hansika

Share via: