மாதவன் நடிக்கும் வெப்சீரிஸ் ‘லெகஸி’

05 Feb 2026

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ தயாரிப்பில், சாருகேஷ் சேகர் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், மாதவன், அபிஷேக் பானர்ஜி, நிமிஷா சஜயன், கௌதம் ராம் கார்த்திக், குல்ஷன் தேவய்யா மற்றும் பலர் நடிக்கும் வெப்சீரிஸ் ‘லெகஸி’.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இத்தொடர் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்கள்.

வீழ்ச்சியை சந்தித்த வயதான கேங்ஸ்டரான பெரியவர் தனது அதிகாரத்தையும், குடும்பத்தையும் குறிப்பாக தனது பாரம்பரிய மரபையும் மீட்டெடுப்பதுதான் இதன் கதை.  

'’லெகஸி’ எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான சாப்டர். அதிகாரம், வெற்றி மற்றும் உணர்வுபூர்வமான பல விஷயங்களை எங்கள் கதாபாத்திரத்தின் மூலம் ஆழமாக உணர்ந்து நடித்தோம். குற்ற உலகத்தை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், விட்டுச் சென்ற பாரம்பரியத்தின் மரபு தனது எதிர்காலத்திற்காக ஆசை, விசுவாசம் மற்றும் குடும்ப உறவுகளுடன் எப்படி மோதுகிறது என்பதை இந்தக் கதை பேசும். 

இந்தக் கதையை படமாக்க பிரம்மாண்டமும் கூட்டு முயற்சியும் அவசியமாக இருந்தது. அந்த நம்பிக்கையை கொடுத்து இந்த பயணத்தை சாத்தியமாக்கிய நெட்பிளிக்ஸ் தளத்திற்கு நன்றி. நெட்பிளிக்ஸ் தளத்தில் 2026 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள ‘லெகஸி’ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பிரம்மாண்டமாகச் சென்றடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்,” என இதன் அறிமுக விழாவில் குழுவினர் தெரிவித்தனர்..

 

Tags: legacy, madhavan, ilaiyaraaja

Share via: