ஏப்ரல் 30ம் தேதிக்கு ‘பெத்தி’ ரிலீஸ் மாற்றம்

05 Feb 2026

ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா, இயக்கத்தில் உருவாகும், ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாக, கிராமத்துப் பின்னணியில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் படம் ‘பெத்தி’.

படத்தின் இறுதிக்கட்ட  பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கோடை விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. .

‘பெத்தி’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ், பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் ஏஆர் ரகுமான் இசையமைத்த “சிக்கிரி சிக்கிரி” பாடல் அனைத்து தளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதுடன், பல சாதனைகளை முறியடிக்கும் பாதையில் பயணித்து வருகிறது.

ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க, சிவராஜ்குமார், ஜகபதி பாபு,  திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராம் சரண், இதுவரை நடிக்காத முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

வெங்கட சதீஷ் கிலாரு, தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் ‘பெத்தி’ படத்திற்கு, ஏஆர் ரகுமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பை கவனிக்க, அவிநாஷ் கொல்லா  தயாரிப்பு வடிவமைப்பு செய்கிறார்.

Tags: peddi, ram charan, ar rahman, buchi babu sana

Share via: