டாக்சிக் - தெலுங்கு மாநிலங்களின் உரிமை 120 கோடி
07 Feb 2026
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டாக்சிக் - எ பேரி டேல் பார் க்ரோன் அப்ஸ்’.
இப்படத்தின் ஆந்திரா, தெலங்கானா மாநில வினியோக உரிமையை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், கமிஷன் அடிப்படையிலான முன்பணத்துடன் 120 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
தெலுங்கு அல்லாத மொழி படம் ஒன்றிற்கு இவ்வளவு தொகை வினியோக ஒப்பந்தம் என்பது மிக அதிகமான ஒன்று. இப்படத்தை வாங்க பல நிறுவனங்கள் போட்டியிட்டன.
இந்த ஒப்பந்தம் குறித்து தில் ராஜு கூறியதாவது:
“யாஷ் இன்று இந்திய சினிமாவின் ஒரு மாபெரும் சக்தி. KGF 2க்குப் பிறகு அவரது மார்க்கெட் உலகம் முழுவதும் மேலும் வளர்ந்துள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு அவரது அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு மிகப் பெரியதாக உள்ளது. நான்கு ஆண்டுகள் கழித்து வரும் இந்தப் படத்தை SVC சார்பில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். யாஷுடன் மேலும் பல படங்களில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்”, என்றார்.
யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுத, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்க, படத்தொகுப்பை உஜ்வல் குல்கர்ணி, தயாரிப்பு வடிவமைப்பை அபித் ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது.
ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) - தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ், மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 'டாக்ஸிக்' திரைப்படம் - ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, விழாக்கால கொண்ட்டாட்டமாக வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது
Tags: toxic, yash, nayanthara

