விஜய் டிவி - நாளை ‘கனா காணும் காலங்கள்’, ரியூனியன் நிகழ்ச்சி
17 Jul 2021
விஜய் டிவியில் 2006ம் ஆண்டு ஒளிபரப்பான தொடர் ‘கனா காணும் காலங்கள்’. பள்ளியைக் கதைக் களமாகக் கொண்டு ஒளிபரப்பான அத் தொடர் டிவி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்தொடரின் நடித்த பலரும் புதுமுகங்களே. அதற்காக புதுமுகங்களைத் தேடிக் கண்டுபிடித்து தொடரில் அறிமுகம் செய்து வைத்தது விஜய் டிவி. அவர்களில் பலர் தற்போது சினிமாவிலும், சீரியல்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘கனா காணும் காலங்கள்’ தொடர் பிறகு பல பகுதிகளாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பானது.
அத்தொடரின் ரியூனியன் ஒன்றை நடத்தி அதையே பிரம்மாண்ட நிகழ்ச்சியாகத் தயார் செய்து நாளை ஜுலை 18, ஞாயிற்றுக்கிழமை, மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது..
தொடரின் படப்பிடிப்பு நடந்த போது நிகழ்ந்த பல சுவாரசியமான சம்பவங்களை அந்த நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஸ்கூல் குழுவில், இர்பான், பிளாக் பாண்டி, ஐயப்பன் உன்னி, கிரண், பிரபு, புலி, டாம், ரவி, மோனிகா, ஸ்ரீராம் கிருஷ்ணன்,
கல்லூரி பேட்ச் 3 குழுவில், விஷ்ணு, ரமேஷ் திலக், சாய் பிரமோதிதா, பாலசரவணன், நிஷா கணேஷ், பிரான்க், அழகப்பன், கணேஷ் சரவணன், வாசு, பாலா, ஜாக்குலின், ஹரிப்ரியா, ஹரிணி, ஸ்வேதா, லட்டு வித்யா,
கல்லூரி பேட்ச் 4 குழுவில், வெற்றி, ரியோ ராஜ், ராஜு, சாய் காயத்ரி, பிரிட்டோ, அஷ்ரிதா, மணி, வைஷாலி, அபி, ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை ரேகா, பி.டி.மாஸ்டர் அன்பு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரின் நாயகன், நாயகியாக தீபக், நட்சத்திரா தொகுத்து வழங்குகிறார்கள்.
Tags: vijay tv, kana kaanum kaalangal, deepak, nakshathra