நடிகர் கமல்ஹாசனுக்கு கொரானோ தொற்று ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்.

தனக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்று மதியம் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்,” எனப் பதிவிட்டிருந்தார்.

கமல்ஹாசன் விரைவில் குணமடைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

அதில், “அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் #COVID19 தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.