டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘கைதி’.

விஜய் நடித்த ‘பிகில்’ படம் அப்போது வெளியாகி இருந்தாலும் ‘கைதி’ படம் விமர்சகர்கள், ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றது.

இப்போது படத்தை ‘கைதி டில்லி’ என்ற பெயரில் ஜப்பான் நாட்டில் வெளியிடப் போகிறார்கள். நவம்பர் 19ம் தேதியன்று படம் வெளியாக உள்ளது.

கார்த்தி நடித்த ஒரு படம் ஜப்பான் நாட்டில் வெளியாவது இதுவே முறை.