ஒரே நாளில் 1.5 மில்லியன் பாலோயர்களைப் பெற்ற ஜோதிகா
01 Sep 2021
சமூக வலைத்தளங்களின் காலம் இது என்று சொல்லுமளவிற்கு பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கான பொதுமக்கள், பல சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பல்துறையினரும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால், இவற்றின் பக்கம் இன்னும் எட்டிக்கூடப் பார்க்காதவர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
சினிமா பிரபலங்கள் பலரும் இன்னும் இந்தப் பக்கம் வராமல் இருக்கிறார்கள். ஒரு சிலர் ஒரு தளத்தில் மட்டும் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக நடிகைகள் பலரும் சமூக வலைத்தள கணக்கை வைத்திருக்கிறார்கள். இல்லாதவர்களும் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் 2 கே ஹீரோயினான ஜோதிகா நேற்று இன்ஸ்டாகிராம் தளத்தில் நுழைந்தார். வந்த 45 நிமிடங்களிலேயே 1.2 மில்லியன் பாலோயர்களைப் பெற்ற ஜோதிகா, 24 மணி நேரத்திற்குள் 1.5 மில்லியன் பாலோயர்களைப் பெற்றார். இன்றைய இளம் முன்னணி நடிகைகள் கூட இப்படி ஒரு சாதனையைப் படைத்ததில்லை. ஆனால், ஜோதிகாவிற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தனது முதல் பதிவில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி, “சுதந்திர தினத்தன்று இமயமலையில். அழகான காஷ்மீர் ஏரிகள், பிகாத் குழுவினருடன் 70 கிமீ டிரெக்கிங். நாம் வாழத் தொடங்காத வரை வாழ்க்கை என்பது இருப்பு மட்டுமே..இந்தியா அருமையானது..ஜெய்ஹிந்த்” எனப் பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாவில் நுழைந்த மனைவி ஜோதிகாவுக்கு “என் பொண்டாட்டி வலிமையானகள், இன்ஸ்டாவில் உன்னைப் பார்ப்பதற்கு த்ரில்லாக உள்ளது,” எனக் கூறியுள்ளார்.
Tags: jyotika, suriya,