மார்ச் 7ல் வெளியாகும் ‘எமகாதகி’

17 Feb 2025

ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள படம் ‘எமகாதகி’. 

அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ள இப்படத்தில் “உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா‘  மற்றும் “மிஸ்டர்.பிரக்னெண்ட்“ படப்புகழ்  ரூபா கொடவாயூர்  முன்னணி பாத்திரத்தில் நடிக்கிறார். 

கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லராக உருவாகியுள்ள படம் இது. 

ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளார்கள். தெரிவித்துள்ளார்.

கீதா கைலாசம், நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம்,’ ஆகீய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்ய, ‘அனிமல், அமரன், லியோ’ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான சின்க் சினிமா, ஒலி வடிவமைப்பை செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச் சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 

மார்ச் 7ம் தேதி இத்திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும்  வெளியிடுகிறது. 

 

Tags: Yamakaathaghi

Share via: