சிவகார்த்திகேயனின் 23வது படத் தலைப்பு ‘மதராஸி’

17 Feb 2025

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ஶ்ரீ லக்‌ஷ்மி பிரசாத் தயாரிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு ‘மதராஸி’ என்ற பெயர் வைத்து அதற்கான முதல் பார்வை போஸ்டர் மற்றும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள்.

மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். கன்னட நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க, வித்யுத் ஜமால், பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்ய, கெவின் குமார், திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்கள்.

Tags: madarasi, ar mugugadoss, sivakarthikeyan, rukmani vasanth, anirudh

Share via: