நான்கு மொழிகளில் தயாராகும் ‘தத்வமசி’

02 Sep 2021

RES என்டர்டெயின்மென்ட் LLP நிறுவனத்தின் மூலம் ராதாகிருஷ்ணா தெலு திரைப்படத்தை தயாரிக்க, எழுத்தாளர் ரமணா கோபி செட்டி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘தத்வமசி’.

இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்கள்.

‘ரோக்‘ திரைப்பட புகழ் இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு அற்புதமான கதாபாத்திரத்திலும், ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

சாம் சிஎஸ் இசையமைக்க, ஷ்யாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்ய, மார்த்தாண்ட் கே வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்தியாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.

“நான் தான் அது” எனும் பொருளுடைய அத்வைத பாரம்பரியத்திலிருக்கும் ஒரு சமஸ்கிருத மந்திரம் இதுவாகும். பண்டைய இந்து நூலான உபநிஷத்தில் இருக்கும் நான்கு மகாவாக்கியங்களில் ‘தத்வமசி’ ஒன்றாகும். இது பிரம்மனுடன் ஆத்மாவின் ஒற்றுமையைக் குறிக்கப் பயன்படுகிறது.


தலைப்பு குறிப்பிடுவது போல, தத்வமசி ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் கூடிய பிரமாண்ட படமாக உருவாக்க உள்ளார்களாம். குண்டலி (ஜாதகம்) போன்று லோகோவில் இரத்த அடையாளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத சக்தி. எல்லையற்ற உணர்ச்சி. பழிவாங்கலின் உச்சத்திற்கு சாட்சியாக இருங்கள்” என்று மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் கூறுகின்றன. 

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் தயாரிக்கப்படுகிறது.

மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரின் விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படும்.

Tags: tatvamasi, ishan, varalakshmi sarathkumar

Share via: