அறிவிப்பில்லாமல் ஆரம்பமான அட்லீ - ஷாரூக்கான் படம்

03 Sep 2021

ஆர்யா, நயன்தாரா, ஜெய் நடித்த ‘ராஜா ராணி’,  விஜய் நடித்த ‘தெறி, மெர்சல், பிகில்’ ஆகிய படங்களை இயக்கி அட்லீ, தொடர்ச்சியாக மூன்று விஜய் படங்களை இயக்கி, அந்தப் படங்களும் வெற்றி பெற்றதால் தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்தார்.

2019ல் வெளிவந்த ‘பிகில்’ படத்திற்குப் பிறகு பாலிவுட் முன்னணி நடிகரான ஷாரூக்கான் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வேலைகளை ஆரம்பித்தார். கொரானோ அலைகளால் அந்தப் படம் அப்படியே தாமதமாகி தற்போது படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

புனேவில் இன்று இப்படத்தின் ஆரம்பமாகியதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த விதமான அறிவிப்பும் இல்லாமல் படத்தை ஆரம்பித்துள்ளார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.

இப்படம் மூலம் தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் ‘டங்கல்’ படத்தில் நடித்த சான்ய மல்கோத்ரா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறாராம்.

இப்படத்தில் ஷாரூக்கான் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பு பத்து நாட்கள் நடைபெ ற உள்ளதாம்.

Tags: atlee, nayanthara, sharukkhan,

Share via: