டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’

01 Sep 2021

எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், எம்ஜிஆர் இயக்கி நாயகனாக இரு வேடங்களில் நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

1973ம் ஆண்டு வெளிவந்த இப்படம் பெரிய வசூலைக் குவித்தது. மஞ்சுளா, லதா, சந்திரலேகா, மீட்டா ரூங்ரத் (தாய்லாந்து நடிகை), எம்ஜி சக்ரபாணி, எம்என் நம்பியார், ஆர்எஸ் மனோகர், அசோகன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

விஞ்ஞானியான முருகன், மின்னலைப் பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், 'பார்முலா'வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். அவர்கள் விஞ்ஞானி முருகனைக் கடத்திவிடுகிறார்கள். காணாமல் போன அண்ணனைக் கண்டுபிடிக்கவும், எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கவும், விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ களம் இறங்குகிறார். அண்ணனைத் தேடி பல நாடுகளுக்குப் பயணிக்கிறார். அண்ணனைக் கண்டுபிடித்து எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை. 

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுதிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தவை. 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்' உட்பட, அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றப்பட்டுள்ள இப்பத்தை செப்டம்பர் 3ஆம் தேதி  தியேட்டரில் மீண்டும் வெளியிடுகிறார்கள்.

ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிலிம்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறார்கள்.

Tags: mgr, manjula, latha, ms viswanathan, ulagam sutrum valiban

Share via: