1000 கோடி வசூலை நெருங்கும் ஷாருக்கானின் 'ஜவான்'
20 Sep 2023
அட்லீ இயக்கத்தில், ஷாரூக்கான், நயன்தரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 7ம் தேதி வெளியான படம் ‘ஜவான்’.
இப்படம் இந்தியாவில் 500 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நோக்கி பயணிக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான 13 நாட்களில் தென்னிந்திய மாநிலங்களிலும் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது.
ஷாருக்கான் நடித்து வெளிவந்த 'பதான்' படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் ‘ஜவான்’ படத்தின் வசூல் போய்க் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் அபாரமாக வசூலித்து, 500 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்துள்ளது.
தென்னிந்தியாவில் மட்டும் 150 கோடி வசூலைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் 907 கோடியே 54 லட்சம் ரூபாயை வசூலித்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
Tags: jawan, atlee, sharukkhan, nayanthara, vijay sethupathi, anirudh