டைகர் நாகேஸ்வரராவ் - இரண்டாவது சிங்கிள் நாளை வெளியீடு

20 Sep 2023

தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து பான் இந்தியா பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் அகர்வால் தயாரிக்கும் படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்.  

வம்சி இயக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ரேணு தேசாய், அனுபம் கேர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். 

இப்படத்தின் முதல் சிங்கிள் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் இரண்டாவது சிங்கிள் ‘வீடு’ பாடல் நாளை செப்டம்பர் 21ம் தேதி வெளியாக உள்ளது.

பான் இந்தியா படமாக இப்படம் அக்டோபர் 20ம் தேதி வெளியாகிறது.

Tags: tiger nageswararao, vamsi, gv prakashkumar, ravi teja

Share via: