திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மனோ கார்த்திகேயன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், சதீஷ்குமார், மிர்ணாளினி ரவி, அனிதா சம்பத், ஹரிஷ் பெராடி, வேலு பிரபாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜாங்கோ’.

இப்படத்தில் சதீஷ்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் பற்றி அவர் கூறுகையில்,

‘‘ஜாங்கோ’ படத்தில் முதலில் நடிக்கும் போது இது ‘டைம் லூப்’ கதை என்பதால் கொஞ்சம் சிரமம் இருந்தது. போகப் போக கதையை உள்வாங்கிக் கொண்டு நடிக்க ஆரம்பித்தேன்.

படத்தில் நடிப்பதற்கு முன்பாக நடிப்புப் பயிற்சி, நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

வழக்கமான கமர்ஷியல் ஹீரோவா அறிமுகமாகணும்னு நான் நினைக்கலை. இன்னைக்கு இருக்கிற டிரென்டுக்கு ஏற்றபடி நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். இரண்டு, மூணு வருஷமா சி.வி.குமார் சாரோட தொடர்புல இருந்தேன்.

இந்தப் படத்துல கதாநாயகனோட கதாபாத்திரம் டாக்டர் கதாபாத்திரம். அதுக்கு நான் பொருத்தமா இருப்பன்னு இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தாங்க. மூளை அறுவை சிகிச்சை நிபுணர் கௌதம் கதாபாத்திரத்துல நான் நடிச்சிருக்கேன். 

ஹாலிவுட்ல நிறைய டைம் லூப் படம் வந்திருக்கு. இந்தப் படத்தை டைரக்டர் மிகச் சரியா ஐடியா பண்ணி, தமிழ் ரசிகர்களுக்கு எப்படிக் கொடுத்தால் ரசிப்பாங்களோ, அப்படி திரைக்கதை அமைச்சி உருவாக்கியிருக்காரு. படம் பார்க்கும் போது வழக்கமான படத்தைப் பார்க்கிற மாதிரி இருக்காது. நிச்சயமா வித்தியாசமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும். அடுத்து என்ன நடக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது,” என்கிறார்.