‘டைம் லூப்’ படமாகத் தயாராகி வரும் ‘ஜாங்கோ’

07 Sep 2021

சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜாங்கோ’.

மனோ கார்த்திகேயன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அறிமுக நடிகர் சதீஷ்குமார், மிருணாளினி ரவி, அனிதா சம்பத், ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக். டேனியல் அன் போப் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக, முதல் முறையாக ‘டைம் லூப்’ எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது

தேனியைச் சேர்ந்த மனோ கார்த்திகேயன், இயக்குநர் பாரதிராஜாவால், தான் சினிமாவுக்கு ஈர்க்கப்பட்டதாகக் கூறுகிறார்.

அறிவழகன் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டியில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் மனோ கார்த்திகேயன். இதைத் தவிர்த்து சில குறும்படங்களையும் ஆவண படங்களையும்  இயக்கியுள்ளார்.

"ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய படம் தான் ஜாங்கோ. தமிழ் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் ‘டைம் லூப்’ அடிப்படையிலான முதல் திரைப்படமாக ஜாங்கோ இருக்கும். குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழும். மேலும் அவை வித்தியாசமான திரைக்கதையுடன் சுவாரசியமான முறையில் காட்டப்படும்," என்றார்.

கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் சான் லோகேஷ் படத்தொகுப்பை கையாளுகிறார். 

இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. 

Tags: jaango, mano karthikeyan, sathish kumar, mrinalini ravi

Share via: