இந்தியன் 2 - தயாரிப்பாளரைக் குறை சொல்லும் இயக்குனர் ஷங்கர்

11 May 2021

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இந்தியன் 2’.

இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கிரேன் விபத்தில் மூவர் உயிரிழந்தார்கள். அதன்பிறகு கொரானோ தாக்கம் வந்ததாலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதே சமயம் தளர்வுகளுக்குப் பின்னும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமலேயே இருந்தது-

படத் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் மோதல் ஏற்பட்டதுதான் அதற்குக் காரணம். இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குனர் ஷங்கர் இப்படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை இயக்கக் கூடாது என தடை கேட்டு வழக்கு தொடர்ந்தது.

நீதிமன்றம் இருவரையும் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னது. அதிலும் எந்த சுமூக முடிவும் வரவில்லை. இதனால் வழக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கே வந்தது.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ தாமதம் குறித்து தயாரிப்பு நிறுவனம் மீதே இயக்குனர் ஷங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டது, படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கொரோனா ஊரடங்கு போன்றவையும்  படப்பிடிப்பு தாமதமாக காரணங்களாகும்.

படத் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல. லைக்கா நிறுவனம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

படத்தின்  பட்ஜெட்டை ரூ 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை லைகா ஏற்படுத்தியது. அரங்குகள் அமைப்பது, நிதி ஒதுக்குவதில் லைகா தாமதமப்படுத்தியது,” என்றும் ஷங்கர் கூறியுள்ளார். 

வழக்கு விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Tags: indian 2, shankar, kamalhaasan, kajal agarwal, anirudh

Share via: