இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கும் ‘ஹிட் லிஸ்ட்’ படப்பிடிப்பு ஆரம்பம்

16 Oct 2022

கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’, இந்த வருடம் வெளியான ‘கூகுள் குட்டப்பா‘ படங்களைத் தயாரித்த இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரின் ஆர்கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு ‘ஹிட் லிஸ்ட்’.

‘புது வசந்தம்’, விஜய் நடித்த ‘பூவே உனக்காக’, சரத்குமார் நடித்த ‘சூர்ய வம்சம்’, கார்த்திக், அஜித் நடித்த ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, விஜயகாந்த் நடித்த ‘வானத்தைப் போல’, சூர்யா நடித்த ‘உன்னை நினைத்து’ உள்ளிட்ட பல பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்தப் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் துவக்க விழா சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கேஎஸ் ரவிக்குமார், சித்தாரா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரா, மைம் கோபி, அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராம்சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தின் படத்தொகுப்பை ஜான் மேற்கொள்ள, கலை வடிவமைப்பை அருண் கவனிக்கிறார்.

நேற்று விஜய் கனிஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி விஜய் கனிஷ்கா, சித்தாரா ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்தப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி ஆக்ஷன் கமர்ஷியல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகிறது.

Tags: hit list, vijay kanishka, vikraman, ks ravikumar, surya kathir, karthikeyan

Share via: