பனாரஸ் - தமிழ்நாட்டில் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி
16 Oct 2022
கன்னடத்தில் முன்னணி இயக்குநரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'.
இந்தத் திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஜயீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் தேவராஜ், அச்யுத் குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். இந்து மக்களின் புனித நகரான காசி நகரத்தின் பின்னணியில் காதலை மையப்படுத்தித் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை என்.கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.
'பனாரஸ்' படத்தின் டீசர், பாடல்கள், டிரைலர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. நவம்பர் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
இதன் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் வாங்கி இருக்கிறார். தொடர்ந்து திரைப்பட வெளியீட்டில் வெற்றிகளைப் பெற்றுவரும் இந்நிறுவனம், பான் இந்திய படமான 'பனாரஸ்' படத்தை தமிழகத்தில் வெளியிடுவதால், இந்த திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: Banaras, Zaid Khan, Sonal Monteiro, Jayathirtha, Ajaneesh Loknath