இடிக்கப்படும் உதயம் தியேட்டர்
12 Feb 2025
சென்னை மாநகரின் பிரபலமான தியேட்டர்களில் ஒன்று அசோக் நகர் பகுதியில், அசோக் பில்லர் அருகாமையில் அமைந்துள்ள உதயம் தியேட்டர் காம்ப்ளக்ஸ்.
1983ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தியேட்டர். உதயம், சூரியன், சந்திரன் என மூன்று தியேட்டர்களுடன் வெற்றிகரமாக நடந்து பின்னர் மினி உதயம் என நான்காவது தியேட்டரும் உருவாக்கப்பட்டது.
கடந்த வருடம் அக்டோபர் மாதமே இந்தத் தியேட்டர் மூடப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதன் பிறகு சில மாதங்கள் படங்கள் திரையிடப்பட்டு வந்தது. பின்னர் டிசம்பர் மாதத்துடன் திரையிடலை நிறுத்திக் கொண்டது உதயம் தியேட்டர் வளாகம்.
கட்டுமான நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த வேலைகள் முடிவடைந்துவிட்டதால் தியேட்டரை நிரந்தரமாக மூடினார்கள். இந்நிலையில் கடந்த வாரம் முதல் உதயம் தியேட்டர் வளாகத்தை இடிக்கும் பணிகள் ஆரம்பமாகி உள்ளன.
இடிக்கும் வேலைகள் முடிவடைந்த பின் அங்கு பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டும் வேலைகள் துவங்கும்.
பலரது சினிமா நினைவுகளில் நீங்காத இடத்தைப் பிடித்த உதயம் தியேட்டர் வளாகம் இடிக்கப்படுவது பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags: udhayam theater