‘டிமான்டி காலனி 2’ மூலம் சினிமாவில் இறங்கியுள்ள பாபி பாலசந்திரன்
24 Dec 2023
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள் நிதி, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘டிமான்டி காலனி 2’ படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் சார்பாக தயாரித்துள்ளவர் பாபி பாலசந்திரன்.
சர்வதேச மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் பாபி பாலச்சந்திரன். தங்களின் தரவுத் தனி உரிமை, இணக்கப்பாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள வழக்கு அபாயங்களை நிவர்த்தி செய்ய உதவும் தீர்வுகளை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர்.
அவர் ஆரம்பித்துள்ள பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக 'டிமான்டி காலனி 2' உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களையும், திரையுலகினரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
படம் பற்றி பாபி பாலச்சந்திரன் கூறுகையில்,
''டிமான்டி காலனி 2’ இந்த தசாப்தத்தில் மிகவும் விரும்பப்படும் திகில் படமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். டிமான்டி காலனி ( 2015) யின் முதல் பாகத்தை விட பத்து மடங்கு சிறப்பாக வந்துள்ளது,'' என்கிறார்.
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பாபி பாலச்சந்திரன்- அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற உடனேயே தொழில் துறையில் ஈடுபட்டு வெற்றிகரமான வணிகத்தை நடத்தி வருகிறார். மேலும் அவர் தன்னை 'ஒரு தொழில் முனைவோர்' என்று கூறுகிறார்.
தனது பணியாளர்கள் பணி புரியும் விதத்தில் பல புதுமையான மாற்றங்களை செய்வதாக அறியப்படும் பாபி, மற்ற தொழில்களில் காணப்படும் சில சிறந்த நடைமுறைகளை இங்குள்ள பொழுதுபோக்கு துறையில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் சொல்கிறார்.
'டிமான்டி காலனி 2' படத்தைத் தவிர்த்து, வேறு பல படைப்புகளையும் தயாரிக்க உள்ளார்.
'டிமான்டி காலனி 2' படத்திற்குப் பிறகு டாக்டர் மனோஜ் பெனோ தலைமையிலான பி டி ஜி யுனிவர்சல்.., மல்டி ஸ்டார்கள் நடிக்கும் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் வேலைகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்ட நிலையில், இன்னும் ஒரு வார கால படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது.
மற்ற தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்க.
Tags: demonte colony 2, bobby balachandran