கலர்ஸ் தமிழ் - முதல் முறையாக ஒளிபரப்பாகும் ‘கடம்பன்’
25 Jun 2021
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ‘சன்டே சினி காம்போ’வில் பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படங்களை ஒளிபரப்பி வருகிறது.
அந்த வரிசையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜுன் 27-ந்தேதி அன்று ‘மூவீ ஆப் த மன்த்’ ஆக மதியம் 1 மணிக்கும் மீண்டும் மாலை 4 மணிக்கும் ‘கடம்பன்’ படம் ஒளிபரப்பாக உள்ளது.
ராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஆர்யா, கேத்தரின் தெரசா, தீப்ராஜ் ராணா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியின் பின்னணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய சிமெண்ட் தொழிற்சாலை உரிமையாளர்கள் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஏராளமான சுண்ணாம்புக் கற்கள் மீது ஆசைப்பட்டு அதை வெட்டி எடுக்க முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கும் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கடம்பனுக்கும் (ஆர்யா) இடையே பிரச்சினை ஏற்படுகிறது. அவர்களிடம் இருந்து காட்டைக் காப்பாற்ற கடம்பன் எவ்வாறு போராடுகிறார் என்பதே இப் படத்தின் கதையாகும்.
வாழ்விடத்தை காப்பாற்றப் போராடும் கடம்பனுக்கும் ரதிக்கும் (கேத்தரின் தெரெசா) இடையிலான காதலையும் இயக்குனர் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
பொழுதுபோக்கு, காதல் மற்றும் அதிரடி சாகசங்கள் நிறைந்த இத் திரைப்படம் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.
Tags: arya, kadamban, raghavan, yuvanshankar raja, catharine tresa