‘தனுஷ் 43‘ படப்பிடிப்பு ஜுலையில் மீண்டும் ஆரம்பம்

25 Jun 2021

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் தனுஷின் 43வது படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதத்தில் மீண்டும் ஆரம்பமாகிறது.

ஹாலிவுட் படமான ‘த கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனுஷ் அமெரிக்கா செல்வதற்கு முன்பு இப்படத்தில் தான் நடித்துக் கொண்டிருந்தார்.

அமெரிக்காவிலிருந்து விரைவில் திரும்ப உள்ள தனுஷ் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இதுதான் கடைசி கட்டப் படப்பிடிப்பு என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தை முடித்ததும்தான் அவர் ஆகஸ்ட் மாதம் முதல் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கப் போகிறார்.

இவற்றிற்குப் பிறகு தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் படத்தில் தனுஷ் நடிப்பார் எனத் தெரிகிறது.

 

Tags: dhanush, karthick naren, malavika mohanan, gv prakashkumar

Share via: