கலர்ஸ் தமிழ் - சண்டே கொண்டாட்டத்தில் ‘சர்பத்’ படக்குழுவினர்

02 Apr 2021

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ‘சண்டே கொண்டாட்டம்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 
 
அந்நிகழ்ச்சியில் இன்னும் கூடுதல் கொண்டாட்டமாக ஏப்ரல் 4ம் தேதி ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் ‘சர்பத்’ படக்குழுவினர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். 

அன்றைய நிகழ்ச்சியில் இசை, நடனம் மற்றும் விளையாட்டுக்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் நேர்த்தியான சங்கமமாக இருக்கும்.  பிரபல இசையமைப்பாளர் ஆஜீஸ், பின்னணி பாடகர்களான திவாகர், ஹரிச்சரண் மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் கலகலப்பான, மெய் மறக்கச் செய்யும் நிகழ்ச்சிகளினால் இந்த அரங்கமே அதிரப்போகிறது.  

‘சர்பத்’ திரைப்படத்திலிருந்து மனதை வருடும் மற்றும் நடனமாடச் செய்யும் அற்புதமான பாடல்களை அவர்கள் இந்நிகழ்ச்சியில் வழங்கவிருக்கின்றனர்.  இத்திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களான நடிகர் கதிர் மற்றும் நடிகை ரகசியா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதோடு, ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி மகிழ்விக்கப் போகின்றனர்.  
 
தனது ரசிகர்களிடமிருந்து ஒரு வியப்பினை நடிகர் கதிர் பெறுவது, இந்த நிகழ்ச்சியை இன்னும்  சுவாரஸ்யமானதாக மாற்றிவிடும்.  அதுமட்டுமல்ல, இத்திரைப்படத்தின் உருவாக்கம் குறித்த பல ஆர்வமூட்டும் விஷயங்களை  படத்தின் இயக்குனர் பிரபாகரன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

இந்நிகழ்ச்சி ஏப்ரல் 4ம் தேதி ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.   

Tags: colors tamil, csk, colors sunday kondattam

Share via: