கலர்ஸ் தமிழ் - நாகினி பாகம் 5 ‘வந்தது நீயா’ நாளை முதல் ஆரம்பம்
02 Apr 2021
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘நாகினி’ தொடர் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு தொடராக விளங்கியது.
அடுத்து ‘நாகினி’ தொடரின் 5வது பாகமாக ‘வந்தது நீயா’ என்ற நெடுந்ததொடர் ஒளிபரப்பாக உள்ளது.
பாலாஜி டெலிஃபிலிம்ஸ் சார்பில் ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்தொடர், நாகினியின் அபூர்வமான உலகத்தை நமக்கு மீண்டும் உயிரோட்டமாக வழங்கவிருக்கிறது.
என்றும் நிலைத்து நீடிக்கும் அதிசக்தி வாய்ந்த நபர்களுக்கிடையிலான காதலை இது சுவைபட சித்தரிக்கிறது. மசோரி என்ற நவீன நகரத்தில் நடைபெறுகின்ற இந்த நிகழ்வுகள் இதற்கு முன்பு பார்த்திராத அளவுக்கு அதிக மர்மத்தையும், திடுக்கிடும் நிகழ்வுகளையும், அற்புதமான கதை பின்னணியையும் கொண்டு பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்வது நிச்சயம்.
நாளை ஏப்ரல் 3 ஆம் தேதி, ஆரம்பமாகும் ‘வந்தது நீயா’ தொடர், கலர்ஸ் தமிழ் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
நாகினி மற்றும் கழுகிற்கு இடையே நடைபெறும் ஒரு விரும்பத்தகாத திருமணத்திற்குப் பிறகு இரத்தம் குடிக்கும் ஒரு காட்டேரியாக அளவற்ற சக்தியினை கொண்டிருக்கும் ரேஹன் சிங்காரம் (ஹர்ஷ் ராஜ்புத் நடிப்பில்) என்ற குழந்தை அவர்களுக்குப் பிறக்குமாறு சபிக்கப்படுகின்றனர். இவனைச் சுற்றி கலகமும், குழப்பமும், அழிவும் ஏற்படும் என்ற சாபமும் ஆட்டிப்படைக்கிறது. அவனது சக்தியின் மூல ஆதாரத்தை அடையாளம் காண முயற்சிக்கும் ரேஹன், அவனது வாழ்க்கையில் பாதி தேவதை மற்றும் பாதி மானுட நபராக திகழும் பிரியாவை (கிருஷ்ணா முகர்ஜி நடிப்பில்) சந்திக்க நேரிடுகிறது. எனினும், அவளது ஆற்றல் பற்றி அறியாதவனாகவே ரேஹன் இருக்கிறான்.
தங்களது சக்தியின் பின்னாலுள்ள ரகசியத்தை கண்டறிவதற்காக அவர்களது உறவின் துரதிருஷ்டவசமான அம்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஒரு யுத்தத்தில் அவர்கள் இருவரும் ஈடுபடுகின்றனர். ஒருவர் மற்றொருவரிடமிருந்து பிரிந்து செல்லுமாறு அவர்களை செய்கின்ற வரலாறு திரும்பவும் நிகழுமா ? அல்லது ஒருவர் மற்றொருவரோடு இன்னும் மிக நெருக்கமாக வருவதற்கு அது உதவுமா ? என்பதுதான் இந்த ஐந்தாம் பாகத்தின் கதை.
Tags: colors tamil, naagini 5, naagini