நான்கு மொழிகளில் வெளியாகும் ‘சக்ரா’ டிரைலர்
26 Jun 2020
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சக்ரா’.
இப்படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் நாளை வெளியாகிறது.
தமிழ் டிரைலரை ஆர்யா, தெலுங்கு டிரைலரை ராணா டகுபட்டி, மலையாளம் டிரைலரை மோகன்லால், கன்னட டிரைலரை கேஜிஎப் நடிகர் யாஷ் ஆகியோர் வெளியிட உள்ளார்கள்.
சைபர் கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘சக்ரா’ படத்தின் டிரைலருக்கு ஒரு முன்னோட்டத்தை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார்கள். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் டிரைலர் மீதும் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags: chakra, vishal, shraddha srinath, regina cassandra, ms anandhan, yuvanshankar raja