பா.ரஞ்சித் தயாரிப்பில் கதாநாயகனாக யோகி பாபு

23 Jan 2021

“பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு” ஆகிய படங்களைத் இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் ‘ரைட்டர்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறது.

அதற்கடுத்து யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பொம்மை நாயகி’ என்ற படத்தை ஆரம்பித்துள்ளது.

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் படம் ஆரம்பமாகி உள்ளது. 

சுபத்ரா, ஜி,எம் குமார், ஹரி, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பாளர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

ஒளிப்பதிவு- அதிசயராஜ்
இசை- சுந்தரமூர்த்தி
எடிட்டர் - செல்வா RK 
கலை - ஜெயரகு
பாடல்கள்- கபிலன்,  அறிவு 
மக்கள் தொடர்பு - குணா
இணை தயாரிப்பு- யாழிபிலிம்ஸ், வேலவன்,  லெமுவேல்.
தயாரிப்பு- பா.இரஞ்சித்.

Tags: yogi babu, pa ranjith, shaan

Share via: