நவம்பர் 6க்கு தள்ளிப் போன ‘பிளாக் விடோ’ ரிலீஸ்

04 Apr 2020

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பின் முக்கியப் படமாக வெளிவந்தது ‘அவெஞ்சர்ஸ்’ படங்கள்.

‘அவெஞ்சர்ஸ், அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆப் அல்ட்ரான், அவெஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் - என்ட்கேம்’ ஆகிய நான்கு படங்களிலுமே முக்கிய பெண் கதாபாத்திரமாக வந்தவர்தான் ‘பிளாக் விடோ’.

‘பிளாக் விடோ’ கதாபாத்திரம் ‘அயர்ன் மேன் 2’ படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு வெளிவந்த படங்களில் எல்லாம் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜோஹன்சன்தான் இந்தப் படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இவரைப் பற்றிய தனிப் படம் எதுவும் இதுவரை வந்ததில்லை. கடந்த பல வருடங்களாகவே அவருக்கென தனி படத்தை உருவாக்கும் எண்ணத்தில் இருந்த மார்வெல் ஸ்டுடியோஸ் ‘பிளாக் விடோ’ படத்தைத் தற்போது தயாரித்துள்ளது.

கேப்டன் அமெரிக்கா - சிவில் வார்’ படத்திற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி ‘பிளாக் விடோ’  படத்திற்கான கதை எழுதப்பட்டுள்ளதாம். இந்தப் படத்தில் ‘அயர்ன் மேன்’ கூட சிறிது நேரம் வர உள்ளாராம்.

மே 1ம் தேதி படம் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று படத்தின் வெளியீட்டுத் தேதி நவம்பர் 9 என அறிவித்திருக்கிறார்கள்.

‘அவெஞ்சர்ஸ்’ பற்றி தனியாக இனி படங்கள் எதுவும் வராத சூழ்நிலையில் அதில் இடம் பெற்ற கதாபாத்திரங்களின் தனிப் படங்கள் வருவதை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அதில் ‘பிளாக் விடோ’ படத்திற்கும் நிச்சயம் தனி இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 

Tags: avengers, black widow, Scarlett Johansson

Share via: