இறுதியில் நடைபெற்ற ’பென்ஸ்’ மாற்றம்

15 Apr 2024

இறுதி வாரத்தில் ‘பென்ஸ்’ படத்தின் இயக்குநராக பாக்கியராஜ் கண்ணனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் லாரன்ஸ் புதிய படமொன்றில் நடிக்கவிருந்தார். இதன் கதையை லோகேஷ் கனகராஜே எழுதியும் இருந்தார். ஆனால், ரஜினி கூறிய கழுகு – காக்கா கதை குறித்த ரத்னகுமார் ட்வீட் மற்றும் பேச்சினால் அவருடைய இயக்கத்தில் நடிக்க லாரன்ஸ் விருப்பவில்லை.

ஆனாலும், இறுதியில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இந்தக் கூட்டணி இணைவதாக இருந்தது. ‘பென்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பில் இயக்குநராக பாக்கியராஜ் கண்ணன் பெயர் இடம்பெற்றது. இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இது குறித்து விசாரித்த போது, சமரச பேச்சில் லாரன்ஸ் – ரத்னகுமார் இணைந்து பணியாற்ற இருந்தார்கள். ஆனால், ஏதேனும் ஒரு வகையில் மனக்கசப்பு ஏற்படலாம் என்று இருவருமே கருதினார்கள். கடைசியாக யாரை இயக்குநராக ஆக்கலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.

அப்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் படம் இயக்குவதற்கு கதை ஒன்றிணை கொடுத்திருந்தார் பாக்கியராஜ் கண்ணன். அவரை அழைத்து ‘பென்ஸ்’ கதையினை முதலில் இயக்குங்கள் என்று ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். அவருக்கும் ‘பென்ஸ்’ கதை மிகவும் பிடித்திருந்ததால் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

லாரன்ஸ் படத்தினை முடித்துவிட்டு, எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் பாக்கியராஜ் கண்ணன்.

Tags: benz, lokesh kanagaraj, ragava lawrence, ratna kumar, bhagyaraj kannan

Share via: