’ரஜினி 171’ அப்டேட்: சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம்

15 Apr 2024

‘ரஜினி 171’ படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் மற்றூம் எடிட்டராக பிலோமின் ராஜ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்திற்கான ப்ரோமோ படப்பிடிப்பு நடைபெற்றது. ஏப்ரல் 21-ம் தேதி வெளியாகவுள்ள இந்த ப்ரோமோவிற்கான இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்க சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதிஹாசன் இருவருமே நல்ல நட்புடன் இருக்கிறார்கள். இதனால் லோகேஷ் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினி நாயகியாக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரஜினி – சத்யராஜ் இருவருமே நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் தான் இணைந்து நடிக்கவுள்ளனர். இன்னும் சில முக்கிய நடிகர்களும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். விரைவில் படக்குழுவினரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.’ரஜினி 171’ அப்டேட்: சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம்

 

Tags: rajini 171, lokesh kanagaraj, shruthi haasan, satyaraj

Share via: