‘ஹனுமான்’ இயக்குநருடன் இணையும் ரன்வீர் சிங்

16 Apr 2024

‘ஹனுமான்’ இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரன்வீர் சிங்.

தென்னிந்திய திரையுலகில் ஒரு படம் பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டால், உடனடியாக அந்த இயக்குநருடன் கைகோர்ப்பது பாலிவுட்டில் வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி இந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஹனுமான்’.

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் தேஜா, சமுத்திரக்கனி, வினய், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ‘ஹனுமான்’ படத்தின் வெற்றியால், ‘ஜெய் ஹனுமான்’ படத்தினை அறிவித்தார் இயக்குநர் பிரசாந்த் வர்மா.

தற்போது ‘ஹனுமான்’ படத்தின் வெற்றியால் பிரசாந்த் வர்மா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ரன்வீர் சிங். அப்போது அவர் கூறிய கதை ரன்வீர் சிங்கிற்கு ரொம்பவே பிடித்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக 3 முறை சந்தித்துப் பேசி இருக்கிறார்கள்.

இந்தக் கூட்டணி படத்தினை தயாரிக்க பல்வேறு தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தை ‘ஜெய் ஹனுமான்’ படத்திற்கா அல்லது புதிய படத்திற்கா என்பது விரைவில் தெரியவரும்.

Tags: ranveer singh, hanuman, prashanth varma

Share via: