ரஜினியை மறைமுகமாக சாடிய விஷால்

16 Apr 2024

ரஜினியை மறைமுகமாக சாடி இருக்கிறார் விஷால்.

2026-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தற்போது விஷாலும் அரசியலில் களம் காண இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக அளித்த பேட்டியொன்றில் ரஜினியை மறைமுகமாக சாடியிருக்கிறார் விஷால். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் “அரசியலுக்கு வரப்போகிறேன். வரப் போகிறேன், அவர் சொன்னால் தான் வருவேன், வரும் நேரத்தில் வருவேன், வந்தாலும் வருவேன் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். கண்டிப்பாக அரசியலுக்கு வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார் விஷால்.

ரஜினி அரசியலுக்கு வருவது தொடர்பாக அளித்த பேட்டியில், விரைவில் வருவேன், கடவுளின் கையில் இருக்கிறது என்றெல்லாம் தெரிவித்து வந்தார்.

இறுதியில் உடல்நிலையை காரணம் காட்டி முழுமையாக அரசியலில் இருந்து விலகிவிட்டார். அவரது பேட்டியை முன்வைத்து விஷால் இவ்வாறு பேசியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

Tags: rajinikanth, vishal

Share via: