தேனீக்களும், புலம்பெயர் தொழிலாளர்களும் - ஆன்ட்ரியாவின் அதிரடிப் பதிவு

26 May 2020

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆன்ட்ரியா இன்று இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள ஒரு பதிவு பலரையும் நிச்சயம் யோசிக்க வைத்திருக்கும்.

கொரானோ ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும், தனத வீட்டின் அருகில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளதைப் பற்றியும் ஒப்பிட்டு ஒரு அற்புதமான பதிவை அவர் பதிவிட்டுள்ளார்.

"நேற்று தூங்கி எழுந்த போது என் ஜன்னலுக்கு அருகே தேனீக்கள் கூட்டத்தை பார்த்தேன். வெளியில் சென்று என்னவென்று ஆராய்ந்தேன். எனது பால்கனி அருகில் மாமரத்தில் தேனீக்கள் பெரிய கூடு ஒன்றை கட்டியுள்ளதைப் பார்த்தேன்.

நான் தேனீக்களின் எதிரி அல்ல. ஆனால் தேனீக்கள் என்னை கொட்டுவதை நான் விரும்பவில்லை.எனவே சில முடிவு எடுத்தேன். அவற்றை துன்புறுத்தாமல் வேறு இடத்திற்கு மாற்ற முயல வேண்டும்.


எனக்கு இரண்டு வழிகள் தான் உள்ளன. பெஸ்ட் கண்ட்ரோல் குழுவினரை அழைத்து அந்த தேனீக்களை கொல்ல வேண்டும்,  அல்லது அவற்றுடன் வாழப்  பழக வேண்டும். பூச்சிகள் பறப்பதை பார்த்தாலே எனக்கு அச்சம். ஆனால்  நான் பாதுகாப்பாக இருப்பதற்காக ஆயிரக்கணக்கான தேனீக்களைக் கொல்வதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

இப்படிப்பட்ட படைப்புகள் மீது எனக்கு மிகப்  பெரிய பொறுப்பு உண்டு என்று நினைக்கிறேன். 

நமது சுற்றுச்சூழலில் அவற்றிற்கு முக்கியப்  பங்கு இருப்பதே அதற்குக்  காரணம். தேனீக்கள் அழிந்தால் அடுத்து நம் மனித இனம் தான். இது தேனீக்களைப்  பற்றிய கதை என்றாலும் நமது நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்களைப்  பற்றியயதும்தான் .

எனது பால்கனியில் வெளியில் உள்ள தேனீக்கள்  கூட்டத்திற்கே நான்  பொறுப்பானவர் என்று உணரும் போது நாடு முழுவதும் ஆங்காங்கே தவித்துக் கொண்டு இருக்கும் புலம்பெயர்  தொழிலார்களுக்கு ஏன் அரசாங்கம் பொறுப்பு ஏற்கவில்லை .

ராணித்  தேனீ மிகவும் புத்திசாலியானது. தனது வேலையாள்  தேனீக்கள் இல்லை என்றால் தான் இல்லை என்று அதற்குத் தெரியும். அந்த தேன் கூடு சரியாக வேலை செய்ய ராணித்  தேனீக்கு  அவை  வேண்டும்.

மனிதர்களாகிய நாம் அந்த  தேனீக்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்", எனப் பதிவிட்டுள்ளார் .

இந்த கொரானோ ஊரடங்கில் எத்தனையோ நடிகைகள் சமூக வலைத்தளங்களில் பலவிதமான பதிவுகளைப் போட்டிருக்கிறார்கள். இருந்தாலும், சமூக அக்கறையுடன் போடப்பட்ட ஒரு பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது

Tags: andrea, bee, corona, covid 19, migrant workers

Share via:

Movies Released On May 19