பூஜையுடன் துவங்கிய கவினின் “மாஸ்க்” திரைப்படம்

17 May 2024

 

'காக்கா முட்டை','விசாரணை','கொடி','வட சென்னை' உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி,பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் 'மாஸ்க்'. இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் SP சொக்கலிங்கம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.இவர் 'தருமி' என்ற குறும்படத்திற்காக பிஹைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளார்.

இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார்.இவருடன்ஆண்ட்ரியா சார்லி,ருஹானி ஷர்மா,பால சரவணன் மற்றும் அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.ஆர்.ராமர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.கலை இயக்குனராக ஜாக்கியும்,ஆடை வடிவமைப்பாளர்களாக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.இன்று 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன்
இனிதே தொடங்கியது.

கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் 'மாஸ்க்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.

நடிகர்கள்:
கவின்
ஆண்ட்ரியா
ருஹானி ஷர்மா
சார்லி
பால சரவணன்
VJ அர்ச்சனா சந்தோக்

தொழில்நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு நிறுவனம்: கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்
எழுத்து மற்றும் இயக்கம்: விகர்ணன் அசோக்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்
படத்தொகுப்பு:ஆர்.ராமர்
கலை இயக்கம்: ஜாக்கி
ஆடை வடிவமைப்பு: பூர்த்தி மற்றும் விபின்
படங்கள்: சாய் சந்தோஷ்
தயாரிப்பாளர்கள்: வெற்றிமாறன் மற்றும் SP சொக்கலிங்கம்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத்

Tags: mask, kavin, vetrimaran, pooja,

Share via:

Movies Released On March 15