ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் “ஏஸ்”

17 May 2024

விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஏஸ்' ( ACE)' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஏஸ்' எனும் திரைப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் கவனித்திருக்கிறார். கமர்சியல் அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இப்படத்தின். ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சேதுபதியின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் விஜய் சேதுபதியின் இளமையானத் தோற்றம் + புகை பிடிக்கும் குழாய் + தாயக்கட்டை ... என பல சுவாரஸ்யமான விசயங்கள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. டைட்டிலுக்கான டீசரில் படத்தில் தோன்றும் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் அறிமுகமும், பின்னணி இசையும், விஜய் சேதுபதியின் திரை தோன்றலும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. டீசரில் சூதாட்டம், துப்பாக்கி, குண்டு வெடிப்பு, கொள்ளை, பைக் சேசிங் ...போன்றவை இருந்தாலும், யோகி பாபுவின் ரியாக்ஷன் சிறப்பாக இருப்பதாலும் இந்த திரைப்படம் கிரைம் வித் காமெடி திரில்லராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த டீசரில் அனிமேஷன் பாணியில் கதாபாத்திரங்கள் அறிமுகமாவதும், அதற்கு ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் 'ஏஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டில் வெளியாகும் இரண்டாவது படம் இது என்பதால் 'ஏஸ்' படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும், திரையுலக வணிகர்களிடமும் அதிகரித்திருக்கிறது.

 

Tags: vijay sethupathi, ace, arumugakumar, first look

Share via:

Movies Released On March 15