• Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • TV / OTT
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
Home News

சென்னை திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’

news
MAR-01-2021

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது.

பல்வேறு நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்டது. இந்தியன்  பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள்  தேர்வாகி  இருந்தது. அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட ‘அமலா’ திரைப்படமும் தேர்வாகி இருந்தது.

நிஷாத் இப்ராஹிம் இயக்கத்தில்,  லிஜின் பொம்மினோ இசையில், ஸ்ரீகாந்த், அப்பாணி  சரத், அனார்கலி மரிக்கர், இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா  மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை முஷினா நிஷாத் இப்ராஹிம் தயாரித்துள்ளார் .

திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த ‘அமலா’  பிப்ரவரி 24 ஆம் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இளம் பெண் ஒருவர் மர்மமான  முறையில் ஒரு பூங்காவில் இறந்து  கிடக்கிறார். அது  கொலையா..? தற்கொலையா..? என்று போலீசார் குழம்பியிருக்கும் அந்த  சமயத்தில் உயர் அதிகாரியான ஸ்ரீகாந்த் அது கொலைதான்  என்று அடித்து சொல்லி துப்பு துலக்க ஆரம்பிக்கிறார்.

அதே  நேரத்தில் நகரத்தில் அடுத்தும் ஒரு இளம் பெண் இறக்கும் தருவாயில்  இருக்கிறாள். அவளைக்  காப்பாற்றிய ஸ்ரீகாந்த், அவளிடம்  விசாரிக்க, அவளோ  ‘அமலா’  என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லி இறந்து விடுகிறாள். புரியாத மர்மமாக  இருக்கும் அந்த  நேரத்தில், சீர்திருத்தப் பள்ளியிலிருந்து ஒருவன் தப்பித்து விட்டதாகத் தகவல் கிடைக்க, தப்பித்தவன்  யார்..? அவனுக்கும் இந்த  கொலைகளுக்கும் என்ன தொடர்பு..? தப்பித்தவன்  பிடிப்படானா.?  என்று கண்டுபிடித்தார்களா என்பதே படத்தின் மீதிக் கதை.

படம் தொடங்கிய சில நொடிகளிலேயே ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுதாகவும், படம் முடியும் வரையிலும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது நாற்காலி முனையில் அமர்ந்தபடியே படத்தை பார்த்து ரசித்ததாகவும் தெரிவித்தனர். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஸ்ரீகாந்த், அப்பணி சரத், அனார்கலி மரிக்கர் ஆகியோரின் நடிப்பு தங்களை  வெகுவாக கவர்ந்ததாக ரசிகர்கள் ஒவ்வொருவரும் இயக்குனரிடம் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவில்  ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

More Recent News

Previous Post 5 மொழிகளில் வெளியாகும் ‘மட்டி’ news MAR-01-2021
Next Post மார்ச் 2ம் தேதியில் வெளியான படங்கள்... news MAR-02-2021
Latest NewsView All
  • ஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS APR-11-2021
  • ஏப்ரல் 10ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS APR-10-2021
  • இன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...

    NEWS APR-09-2021
  • ஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS APR-09-2021
  • சொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு

    NEWS APR-08-2021

You May Like   

  • Meendum Yathra / மீண்டும் யாத்ரா (2021)

  • Kutty Story / குட்டி ஸ்டோரி (2021)

  • Puppy (2019)

  • Aadai (2019)

  • Kuthoosi (2019)

  • Ratsasan (2018)

  • Facebook
  • Twitter
  • linkedin
  • Rss
Copyright © 2021, s4s. All Rights Reserved