‘ஓ மை கடவுளே’ எனக்கு ஸ்பெஷல் - ரித்திகா சிங்

11 Feb 2020

ஆக்சஸ் பிலிம் பேக்டரி, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே’.

ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் ‘இறுதிச் சுற்று’ ரித்திகா சிங். இந்தப் படம் பற்றி அவருடைய அனுபவத்தைக் கூறுகையில்,

“ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாபாத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்கமான வாய்ப்பாக தோன்றியது. 

இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறித்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதை அற்புதமாக இருந்தது.  படம் முழுக்க நீங்கள்  புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள். 

அசோக் செல்வன் மிகத் திறமை வாய்ந்த நடிகர். இப்படத்திற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் குவியும். வாணி போஜன் ஒரு அற்புதமான நடிகை. அவரைச் சுற்றி இருப்பவர்களிடம் எப்பொதும் புன்னகை தவழும்.  நேர்மறை மிக்க பண்பாளர். இப்படம் மூலம் அவர் என் சகோதாரியாக மிக நெருக்கமான உறவாகிவிட்டார். 

“ஓ மை கடவுளே” வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாக இப்படம் இருக்கும். டிரெய்லரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். இப்படம் உங்கள் மனதில் பல காலம்  நீங்காது நிற்கும்,” என்றார்.

‘ஓமை கடவுளே’ பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.

Tags: oh my kadavule, ashok selvan, rithika singh, ashwath marimuthu

Share via: