விஜய் சேதுபதி ஜோடியாக சமந்தா ?
10 Feb 2020
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிப்பார் என்றார்கள். ஆனால், அந்தப் படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தொடர்ந்து நடக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள்.
இதனிடையே, விஜய் சேதுபதிநாயகனாக நடிக்க ‘காத்து வாக்கில ஒரு காதல்’ படத்தை இயக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளாராம். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
தமிழில் வேறு படங்கள் எதுவும் இல்லாத நிலையில் சமந்தா இந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்கலாம் என்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் ‘நெற்றிக்கண்’ படத்தைப் படமாக்குவதையும் தற்போது நிறுத்தி வைத்துள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.
Tags: vijay sethupathi, samantha, vignesh sivan