பழிக்குப் பழி வாங்கும் ஒரு கதையை விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லராக கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிச் செல்வன்.

ஜெய், அதுல்யா, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், சுனில் மற்றும் பலர் நடித்துள்ள படம் இது.

மந்திரியான சுனிலிடம் இருக்கும் வைர நகைகளை அவருடைய பினாமி நகைக்கடைக்குச் சென்று கொள்ளை அடிக்கிறது முகமூடி அணிந்த வம்சி கிருஷ்ணா தலைமையிலான குழு. அப்போது ஜெய்யின் காதலியான அதுல்யா ரவியை சுட்டுக் கொன்று விடுகிறார்கள். தன் காதலியைக் கொன்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பழி வாங்க நினைக்கிறார் ஜெய். அவர்களைக் கண்டுபிடித்தாரா, பழி வாங்கினாரா என்பதுதுன் படத்தின் மீதிக் கதை.

ஆரம்பத்தில் கொஞ்சம் காதல், பிறகு ஆக்ஷன் என ஜெய் அவரது கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார். சமூக அக்கறை கொண்ட போராளிப் பெண்ணாக அதுல்யா ரவி. அமைச்சராக சுனில் ரவி, கொள்ளைக் கூட்டத் தலைவனாக வம்சி, அமைச்சராக சுனில், அவரது ஆசை நாயகியாக வித்யா பிரதீப் ஆகியோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

சாம் சிஎஸ் பின்னணி இசை ஆங்காங்கே படத்திற்கு பரபரப்பைக் கூட்டுகிறது. எதிர்பாராத சில திருப்பங்களை வைத்து பரபரப்பான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். 

பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களை மட்டும் பார்க்காமல் அடுத்த கட்ட ஹீரோக்கள் நடித்து வெளிவரும் இம்மாதிரியான நிறைவான  படங்களையும் ரசிகர்கள் ரசித்துப் பார்க்க வேண்டும்.