ஒயிட் ரோஸ் - விமர்சனம்
07 Apr 2024
கே ராஜசேகர் இயக்கத்தில், சுதர்ஷன் இயக்கத்தில், கயல் ஆனந்தி, ஆர்கே சுரேஷ், ரூசோ மனோகரன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
போலீஸ் என்கவுண்டரில் தவறுதலாக கொல்லப்படுகிறார் கயல் ஆனந்தியின் கணவர். பெண் குழந்தை ஒன்று இருக்க வாழ்க்கையை ஓட்ட, ஒரு கடையில் வேலைக்கச் சேர்கிறார் ஆனந்தி. அந்த சமயத்தில் கடன்காரர் ஒருவரால் ஆனந்தியின் பெண் குழந்தை கடத்தப்படுகிறார். கடனை திருப்பிக் கொடுத்தால் குழந்தையைத் தருவேன் என மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் அவ்வளவு பணம் சம்பாதிக்க விபச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் ஆனந்தி. அப்படி போகும் போது சைக்கோ ஆர்கே சுரேஷிடம் மாட்டிக் கொள்கிறார். அவரிடமிருந்து தப்பித்தாரா, தனது பெண் குழந்தையைக் காப்பாற்றினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இதற்கு முன்பு தமிழில் பார்த்த சில படங்களை இந்தப் படம் ஞாபகப்படுத்துகிறது. இருந்தாலும் திரைக்கதையை கொஞ்சம் விறுவிறுப்பாகவே கொடுத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஆனந்தியின் நடிப்புதான் படத்தைக் காப்பாற்றுகிறது. ஒரு பக்கம் கணவனை இழந்து தவிக்கும் போது, அடுத்து குழந்தையைக் காப்பாற்றத் துடிக்கிறார், ஆனால், அவரே ஒரு சைக்கோவிடம் மாட்டிக் கொள்கிறார். அடுத்தடுத்து துயரங்களை சந்திக்கும் ஒரு அப்பாவிப் பெண்ணாக அனுதாபத்தை அள்ளுகிறார் ஆனந்தி.
ஆர்கே சுரேஷை இந்தப் படத்தில் அதிகம் பேசவிடாமல் அவரை மிரட்டலான பார்வையுடன் மட்டும் நடிக்க வைத்திருக்கிறார். தாடியும், மீசையுமாக, வெறித்த பார்வையுடன் அக்கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார் சுரேஷ்.
தவறுதலாக ஒரு என்கவுண்டரை செய்து ஒரு அப்பாவின் உயிரைப் பறித்துவிட்டோம் என்ற குற்ற உணர்வில் இருக்கிறார் அசிஸ்டென்ட் கமிஷனர் ரூசோ ஸ்ரீதரன். அதனால், ஆனந்தியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என முயற்சிக்கிறார்.
சுதர்ஷன் பின்னணி இசை, இளையராஜா ஒளிப்பதிவு குறிப்பிடும்படி அமைந்துள்ளன.
அடுத்து இப்படித்தான் கதை நகரும் என யூகிக்க முடிவது படத்தின் குறை. ஆனாலும் போரடிக்காமல் நகர்கிறது படம்.
Tags: white rose, kayal anandhi