வெல்வெட் நகரம் - விமர்சனம்

09 Mar 2020

தயாரிப்பு - எ மேக்கர்ஸ் ஸ்டுடியோ
இயக்கம் - மனோஜ் குமார் நடராஜன்
இசை - அச்சு, சரண் ராகவன்
நடிப்பு - வரலட்சுமி சரத்குமார், ரமேஷ் திலக், அர்ஜய், சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா சுந்தர்
வெளியான தேதி - 6 மார்ச் 2020
மதிப்பெண் - 2/5

அறிமுகம்

அறிமுக இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன் இயக்கியிருக்கும் படம். 

கதை

சமூக வேலையில் அதிக ஆர்வம் கொண்ட நடிகையான கஸ்தூரி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரது தோழியான டிவி நிருபர் வரலட்சுமி, கஸ்தூரியைக் கொன்றது யார் எனக் கண்டுபிடிக்க முயல்கிறார். சென்னைக்கு வந்து அவர் தங்கும் வீட்டில் சிலர் புகுந்து அந்த வீட்டில் உள்ள வரலட்சுமியின் உறவினர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து பணம் தர மிரட்டுகிறார்கள். வரலட்சுமியும் அவர்களிடம் சிக்குகிறார். அனைவரும் அந்த கொள்ளையர்களிடமிருந்து தப்பினார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

படத்தின் ஆரம்பத்திலேயே வரலட்சுமி ஆக்ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுத்திருக்கிறாரோ என ஆச்சரியப்பட வைக்கிறார். ஆனால், அவரும் பணயக் கைதியாக சிக்கி அமைதியாகிவிடுகிறார். படத்தில் வில்லன் அர்ஜய் தான் கதாநாயகன் போல முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய அடியாட்களாக வரும் அனைவருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள். வரலட்சுமியின் தோழி பின்னணிப் பாடகி மாளவிகா சுந்தர் அறிமுகப் படத்திலேயே குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.

நிறை

படத்தின் ஆரம்பக் காட்சிகளைத் தவிர வேறு எதுவும் இல்லை.

குறை

ஆரம்பக் காட்சிகளுக்குப் பிறகு படம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதை விடுத்து வேறு எங்கெங்கோ பயணிக்கிறது. பின்னர் ஒரு வீட்டுக்குள்ளேயே படம் அடங்கிப் போவது அலுப்பைத் தருகிறது.

கருத்துரை

வெல்வெட் நகரம் - மினுமினுப்பு அல்ல...

Tags: velvet nagaram, manoj kumar natarajan, varalaxmi

Share via: