எட்டுத்திக்கும் பற - விமர்சனம்

09 Mar 2020

தயாரிப்பு - வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் - கீரா
இசை - எம்.எஸ்.ஸ்ரீகாந்த்
நடிப்பு - சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா
வெளியான தேதி - 6 மார்ச் 2020
மதிப்பெண் - 2.25/5

அறிமுகம்

‘பச்சை என்கிற காத்து, மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கிய கீரா இயக்கியிருக்கும் படம் இது. இந்தப் படமும் ஆணவக் கொலையை எதிர்க்கும், சாதியைப் பேசும் ஒரு படம்தான். கடந்த சில வாரங்களாக இப்படி சாதி பேசும் படங்கள் வாரத்திற்கு ஒன்றாய் வருவது ஆச்சரியம்தான்.

கதை

சாந்தினி தன்னை விட கீழ் சாதியில் பிறந்த இளைஞனைக் காதலித்து திருமணம் செய்து கொள்ள சென்னை கிளம்புகிறார். சாதி வெறியுடன் ஊரில் திரியும் ஒருவர் அவர்களை விரட்டிப் பிடிக்க முயல்கிறார். பிளாட்பாரத்தில் வசிக்கும் நிதிஷ் வீரா தன் காதலியைத் திருமணம் செய்து கொள்ளும் வேலையில் இருக்கும் போது, தன் குழந்தையைக் காப்பாற்ற பணத்திற்காக அலையும் முனிஷ்காந்திடம் தன் பணத்தைத் திருட்டுக் கொடுக்கிறார். போலீஸ் என்கவுண்டரில்  இருந்து தங்கள் தோழர், தோழியைக் காப்பாற்ற வக்கீல் சமுத்திரக்கனி தலைமையிலான குழு போராடுகிறது. இவர்கள் அவரவர் பிரச்சினைகளிலிருந்து விடுபடுகிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

படத்தில் இவர்தான் கதாநாயகன் என யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சமுத்திரக்கனி, நிதிஷ் வீரா, முனிஷ்காந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நாயகி என்று சாந்தினியை வேண்டுமானால் சொல்லலாம். அவரவர் கதாபாத்திரங்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறார்கள். 

நிறை

படத்தில் ஆணவக் கொலை பற்றியும், சாதி வேற்றுமை பற்றியும் எடுத்துச் சொல்லியிருப்பதைப் பாராட்டலாம். 

குறை

படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காவது அதிக முக்கியத்துவம் கொடுத்து அழுத்தமாகக் காட்டியிருக்கலாம். திரைக்கதையில் இன்னும் திருப்பமான காட்சிகள் அதிகம் இருந்திருக்கலாம். 

கருத்துரை

எட்டுத்திக்கும் பற - சற்றே உயரத்துடன்...

 

Tags: ettu thikkum para, keera, samuthirakani, chandini

Share via: