தூங்காவனம் - விமர்சனம்

12 Nov 2015
தயாரிப்பு - ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் - ஸ்ரீ கோகுலம் மூவீஸ் இயக்கம் - ராஜேஷ் எம். செல்வா இசை - ஜிப்ரான் ஒளிப்பதிவு - சானு ஜான் வர்கீஸ் படத் தொகுப்பு - ஷான் முகம்மது கலை - பிரேம் நவாஸ் வெளியான தேதி - நவம்பர் 10, 2015 நடிப்பு - கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், யூகி சேது, மது ஷாலினி, மாஸ்டர் அமன் மற்றும் பலர் கதைச் சுருக்கம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றுபவர் கமல்ஹாசன். பிரகாஷ்ராஜ் ஆள் ஒருவர் கடத்தும் போதைப் பொருளைக் கைப்பற்றுகிறார். அதற்கு பழி வாங்குவதற்காக கமல்ஹாசனின் மகனைக் கடத்திவிடுகிறார் பிரகாஷ்ராஜ். மகனை மீட்பதற்காக பிரகாஷ்ராஜுக்குச் சொந்தமான நைட் கிளப்பிற்குள் நுழைகிறார் கமல்ஹாசன். அதன் பின் மகனை மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. விமர்சனம் தமிழ் சினிமா பார்த்த எத்தனையோ கடத்தல் கதைகளில் இதுவும் ஒன்று. கமல்ஹாசன் எடுத்திருப்பதால் கொஞ்சம் ஸ்பெஷல். ஒரு நைட் கிளப்பில் ஒரு இரவிலேயே மொத்த கதையும் நகர்வது தூக்கத்தை வரவைக்கிறது. திரும்பத் திரும்ப பெரும் கும்பல் நடனமாடும் அரங்கம், கிச்சன், பில்லியர்ட்ஸ் விளையாடும் இடம், பிரகாஷ் ராஜ் அறை ஆகியவற்றில் மட்டுமே காட்சிகள் நகர்கின்றன. ஷேவ் செய்யாத, தூங்காத முகத்துடனேயே கமல் படம் முழுவதும் வருகிறார். அதோடு வயிற்றில் வாங்கிய கத்திக் குத்து காயம் வேறு. அவருடைய நடிப்பு வழக்கம் போலவே, எந்த குறையும் இல்லாமல். ஆனால், த்ரிஷாவுக்கு கொஞ்சம் ஒழுங்காக மேக்கப் போட்டிருக்கலாம். யூகி சேதுவை புரியும்படி பேச வைத்திருக்கலாம். பிரகாஷ்ராஜை வழக்கம் போல சிரிக்க வைப்பதை தவிர்த்திருக்கலாம். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மதுஷாலின்கு முத்தம் கொடுத்து அதிர்ச்சியடைய வைக்கிறார். கமல் படம் என்றாலே குறைகள் இல்லாத படமாக இருக்க வேண்டும் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், கவனக் குறைவா அல்லது அவசரமா என்று தெரியவில்லை. ஆங்காங்கே பல லாஜிக் மீறல்கள்.  நட்சத்திர அந்தஸ்து உள்ள ஒரு நைட் கிளப்பில் பிரகாஷ்ராஜ் ரூம் தவிர வேறு எங்குமே சிசி டிவி இல்லையா என்ற கேள்வி எழுகிறது. மூன்று போலீஸ் அதிகாரிகள் கிளப்புக்குள் நுழைவதில் தானே வரவைத்த கமலைத் தவிர வேறு யார் பற்றியும் பிரகாஷ்ராஜுக்குத் தெரியவில்லை. போதைப் பொருள் பையைக் கைப்பற்றிய பிறகும் கிஷோர் அதை எடுத்துக் கொண்டு கிளம்பாமல் தன் காரிலேயே டிக்கியினுள் அவ்வளவு எளிதாகவா மறைத்து வைப்பார். கிளைமாக்சில் அவர் மட்டும் பெல்ட் மாட்டிக் கொண்டு காதை மோத விட்டால் அவர் மட்டுமே எப்படி தப்பிக்க முடியும் ?. ஒரு நைட் கிளப்பை அற்புதமாக வடிவமைத்த கலை இயக்குனரைப் பாராட்ட வேண்டும். அந்த இடத்திற்குள் தன் இருப்பையும் ஒளிப்பதிவாளர் அழுத்தமாகக் காட்டியிருக்கிறார். ஒரு பிரெஞ்சு பட ரீமேக்கிற்கு மலையாள ரீமேக்கான ‘பாபநாசம்’ படமே பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

Tags: thoongavanam

Share via: