எஸ்ஏ பிரபு இயக்கத்தில், ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

கார் மெக்கானிக்காக இருக்கும் ஜஸ்டின் விஜய், பேய், அமானுஷ்யம் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு அதற்காக இருக்கும் பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து கற்றுக் கொள்கிறார். பின் ஒரு வீட்டில் பேய் இருப்பதாகவும், அதை விரட்ட வேண்டும் என்ற ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. அந்த வீட்டிற்குச் சென்ற சோதனையில் ஈடுபடுகிறார். அங்கு சில திடுக்கிடும் விஷயங்கள் நடக்கின்றன. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

எத்தனையோ பேய்க் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தெளிவான திரைக்கதை இல்லாத ஒரு படமாக இப்படம் இருக்கிறது. கதாநாயகனாக நடித்துள்ள ஜஸ்டின் விஜய் அவருடைய தோற்றத்திலேயே சரியான கவனம் செலுத்தவில்லை. வித்யா பிரதீப் கதாபாத்திரம் பற்றிய சஸ்பென்ஸ் எதிர்பாராத ஒன்று. அமானுஷ்ய பயிற்சி தரும் ஆசிரியராக கஸ்தூரி நடித்துள்ளார்.

பயமுறுத்தும் அளவிற்கு என்னென்னவோ செய்கிறார் இயக்குனர், ஆனால், பயப்படுமபடி எதுவும் நடக்கவில்லை. யோசித்த அளவிற்கு படத்தைக் கொடுத்திருக்கலாம். அதற்கான அனுபவம் எங்குமே வெளிப்படவில்லை.