10 எண்றதுக்குள்ள - விமர்சனம்

21 Oct 2015

தயாரிப்பு - ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்சன்ஸ் எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் - விஜய் மில்டன் இசை - பாடல்கள் - இமான் இசை - பின்னணி - அனூப் சீலின் படத் தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் நடிப்பு - விக்ரம், சமந்தா, பசுபதி, முனிஷ்காந்த் ராமதாஸ், ராகுல் தேவ், அபிமன்யு சிங் மற்றும் பலர். வெளியான தேதி - 21 அக்டோபர் 2015 கதைச் சுருக்கம் டிரைவிங் ஸ்கூலில் வேலை செய்யும் விக்ரம், பணம் கொடுத்தால் எந்தப் பொருளையும் கார் மூலம் கடத்திக் கொண்டு வந்து கொடுப்பதில் வல்லவர். பசுபதி கேட்டுக் கொண்டதால் அவரிடம் வேலைக்குச் சேர்கிறார். ஒரு முறை பசுபதி ஒரு ஜீப்பை விக்ரம் மூலம் வட இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். அதில் விக்ரமிடம் டிரைவிங் பயின்ற சமந்தாவும் கடத்தப்படுகிறார். விக்ரமுக்கு கடத்தப்படுவது சமந்தாதான் என்பது தெரிய வருகிறது. சமந்தா ஏன் கடத்தப்படுகிறார், ஆரம்பத்தில் இருந்தே சண்டை போட்டுக் கொண்ட விக்ரம், சமந்தா காதலில் விழுந்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. விமர்சனச் சுருக்கம் ‘கோலி சோடா’ என்ற ஒரு சிறிய படத்தைக் கொடுத்து இயக்குனராக வெற்றி பெற்றவர் விஜய் மில்டன். ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் அவர் எடுத்துள்ள ஒரு ஸ்டன்ட் காட்சியின் பட்ஜெட்டில்தான் ‘கோலி சோடா’ படத்தை முடித்திருப்பார். இந்தப் படத்தின் கதையில் அப்படி என்ன விஷயம் பிடித்திருந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருப்பார்... விக்ரமுக்கு இன்னொரு ‘ராஜ பாட்டை’...

Share via: