மாறன் இயக்கத்தில், சித்துகுமார் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மன அழுத்தத்தால் காரில் வீடு செல்ல தடுமாறும் பூமிகாவுக்கு உதவி செய்கிறார் உதயநிதி. பூமிகாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு திரும்புகிறார். மறுநாள் காரை பூமிகா வீட்டில் திரும்பவிட செல்ல காரை எடுக்கிறார். அப்போது பார்த்தால் டிக்கியில் பூமிகாவின் பிணம் இருக்கிறது. இரவில் வீட்டில் விட்டவர் காரில் எப்படிப் பிணமாக இருக்கிறார் என அதிர்ச்சியடைகிறார் உதயநிதி. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு முழுமையான த்ரில்லர். ஆரம்பம் முதல் கடைசி வரை மிகவும் பரபரப்பாக நகர்கிறது. ஒரு இயல்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் உதயநிதி. அவருடைய நண்பராக பிரசன்னா. ஸ்ரீகாந்த் தான் படத்தின் வில்லன். பூமிகாவின் கதாபாத்திரம் நாம் எதிர்பார்க்காத சில திருப்பங்களைத் தருகிறது. உதயநிதியின் காதலியாக ஆத்மிகா.
மலையாள சினிமாவில் இது மாதிரியான த்ரில்லர் கதைகள் அதிகம் வரும். தமிழ் சினிமாவில் அப்படி ஒரு படம் வந்திருப்பத ஆறுதல். இந்தக் காலத்தில் எங்கு திரும்பினாலும் சிசிடிவி கேமரா இருக்கிறது. அப்படி இருக்கும் போது இப்படத்தில் நடக்கும் சில விஷயங்கள் லாஜிக்காக இடிக்கிறது.