பயமறியா பிரம்மை - விமர்சனம்

22 Jun 2024

ராகுல் கபாலி இயக்கத்தில், கே இசையமைப்பில், ஜேடி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

ஒரு நாவலை நாம் படிக்கும் போது அந்தக் கதைக்குள் ஈர்க்கப்பட்டால் அதில் முதன்மைக் கதாபாத்திரமாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை நாமாகவே கற்பனை செய்து படிப்போம். அப்படியான ஒரு மனநிலையுடன் எழுதப்பட்ட கதைதான் இந்தப் படம்.

பிரபல எழுத்தாளரான கபிலன், ஜெகதீஷ் என்ற கதாபாத்திரம் அடுத்தடுத்து செய்யும் கொலைகளைப் பற்றி சிறையில் இருக்கும் ஜெகதீஷிடமே கேட்டு எழுதுகிறார். அந்த நாவலை படிக்கும் சிலர் அந்தக் கதாபாத்திரமாகவே தங்களை நினைக்க அப்படியாக அந்த ஜெகதீஷ் செய்யும் சில கொலைகள், அதற்கான காரணங்கள்தான் இந்தப் படத்தின் கதை.

எழுத்தாளர் கபிலன் ஆக வினோத் சாகர், கொலைக் கைதி ஜெகதீஷ் ஆக ஜோடி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நாவலைப் படிக்கும் வாசகர்களான குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் தங்களை ஜெகதீஷ் ஆக நினைத்து கொலைகளைச் செய்கிறார்கள். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவருமே இயக்குனரின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒரு கதை சொல்லியாகவும் நகர்கிறது படம். இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம். மாறுபட்ட படத்தைக் கொடுக்க முயற்சித்தது சரி, ரசிர்களின் பார்வையிலும் இருந்து அவர்களுக்குமான படமாகவும் சேர்த்து கொடுத்திருக்க வேண்டும்.

Tags: bayamariya brammai

Share via: