பணம் கேட்டு மிரட்டல், வளர்ப்பு மகள் மீது கடும் வருத்தத்தில் ராஜ்கிரண்

04 Dec 2022

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இல்லையென்றால் அவரது பெயரை அசிங்கப்படுத்திவிடுவேன். சமூகம் வலைத்தளம் மூலம் மக்களிடம் அவரது நன்மதிப்பைக் குறைப்பேன் என்று மிரட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி இருவரும், வளர்ப்பு மகளாக இருந்த போதும் அவர்களது சொந்த மகள் போலத்தான் வளர்த்தார்கள் நன்கு படிக்கவைத்து ஆளாக்கினார்கள். காதல் விவகாரத்தில் கூட இந்த வயதில் இதெல்லாம் தவறு என்று அறிவுரை சொல்லி வளர்த்தார்களாம். இருந்தாலும் தற்போது ஒருவரை காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார். அந்த நபரை அழைத்து ராஜ்கிரண் பேசியிருக்கிறார். பிறகு தன் வளர்ப்பு மகளிடம் அவர் தவறான நபராக இருக்கிறார் வேண்டாம் என்று தெரிவித்தாராம். ஆனால் அவரைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்ததால் ராஜ்கிரண் உன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு நாங்கள் சொல்லியும் கேட்காமல் நீ அவரைத் திருமணம் செய்துகொண்டால் எங்களுக்கும், உனக்கும் எந்த தொடர்பும் இருக்காது எந்த உதவியும் செய்யமாட்டோம் என்று தெரிவித்து விட்டாராம்.

இந்த நிலையில்  அவரது வளர்ப்பு மகள் தான் காதலித்தவரையே திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். சமீபத்தில் அந்த பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து விளம்பரப் படம் ஒன்றில் ராஜ்கிரண் மகள் என்று சொல்லி நடித்திருக்கிறார்களாம். அது பற்றி தெரிய வந்ததும், ராஜ்கிரண் கண்டித்துள்ளார். அவர்களும் இனிமேல் உங்கள் பெயரை பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவிதுள்ளார்கள். ஆனாலும், அதையே தொடர்ந்து செய்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

பணத் தேவை அவர்களுக்கு இருப்பதால் ராஜ்கிரணின் அமைதியைப் பயன்படுத்தி, உங்கள் நற்பெயருக்கு களங்கம்  ஏற்படுத்தி, அசிங்கப்படுத்துவோம்  என்று மிரட்டி தங்களுக்கு 30 லட்சத்திற்கு மேல் தர வேண்டும் என்றும் மிரட்டி அழுத்தம் கொடுப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதோடு இல்லாமல் ராஜ்கிரணின் மனைவியின் வேறு வழியில் பிறந்த குழந்தை என்று தப்பு தப்பாகக் கிளப்பிவிடுவேன் என்று தொலைபேசியில்  பகிரங்கமாக மிரட்டிவருவதாகச் சொல்கிறார்கள். இதனால் ராஜ்கிரண், மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம்.

குழந்தையைத் தத்தெடுத்து தங்கள் குழந்தையாக அன்பைக் கொடுத்து வளர்த்ததற்கு, அது இப்படியா முடியவேண்டும்,  பாம்பிற்கு பாலை வார்த்தது போலாகிவிட்டது என்று ராஜ்கிரணின் நணபர்கள் வருத்தத்துடன் சொல்கிறார்கள் .

Tags: rajkiran, actor rajkiran

Share via: